தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கருர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை நகரப்பகுதி மற்றும் வதியம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை […]
