பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். அந்த சமயத்தில் காவல்துறையினர் ஆழ்வார்திருநகரி வாய்க்கால் படித்துறையில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதை பார்த்து உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணம் சீட்டுக்கட்டு […]
