கஞ்சா விற்பனை குற்றத்திற்காக ஏற்கெனவே ஒருவர் சிக்கிய நிலையில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கோட்டியால் பேருந்து நிலையத்தின் அருகே கஞ்சா விற்றதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்குரிய சில நபர்கள் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். இதனை கண்ட காவல்துறையினர் அவர்களை துரத்தியதில் ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். மீதமுள்ள 6 பேர் தப்பி ஓடினர். அதன்பின் சிக்கியவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் […]
