ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் யோனாகுனி என்னும் நகரத்தில் திடீரென்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவாகியுள்ளது. யோனாகுனி நகரத்தின் தென்மேற்கு பகுதியில் சுமார் 68 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால், ஏதும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
