தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் நலனை கருதி 6 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக தர்மபுரி மாவட்டத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் அரசு பேருந்துகள் இயக்கத் தொடக்க விழா பொன்னகரம் பேருந்து நிலையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். இவர் நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். ஜி.கே மணி எம்.எல்.ஏ முன்னிலை வகித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் […]
