ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உடல் உறுப்புகள் பாதிப்படைந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இந்தியர் உயிர் பிழைத்த சம்பவம் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த 32 வயதான அருண்குமார் நாயர் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு ஜூலை மாதம் 31-ஆம் […]
