கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி ஒரு குடும்பமே பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளாவில் கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல குடியிருப்புகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. அந்த வகையில் கோட்டயம் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உள்ளிட்ட 13 பேரும் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
