கார் வெடிப்பில் சம்பந்தப்பட்ட 6 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த மாதம் 23-ஆம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா மூபீன் என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முபீன் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஏராளமான வெடிபொருட்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதற்கான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் முகமது தல்கா, முகமது அசாருதீன், […]
