வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இலக்கியா தனது 2 குழந்தைகளுடன் அரையபுரத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார் . இந்நிலையில் அவ்வப்போது மனைவி இலக்கியா ஆனாங்கூரில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக […]
