திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு கொண்ட ஆறு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தெள்ளார் பகுதியில் நகை அடகு கடை வைத்து நடத்திக் கொண்டிருந்த அசோக சக்கரவர்த்தி (56) என்ற நபரை சென்ற மே மாதம் 25ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். இதுபற்றி தெள்ளார் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வந்தவாசியை சேர்ந்த திருநாவுக்கரசு (38), சாய்பாபா (33), முருகன் (33), […]
