பயணிகளிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்த குற்றத்திற்காக வடமாநில கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் புடன்பகுடி என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பணிக்காக சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் தங்கியுள்ளார். கடந்த 28-ஆம் தேதி சொந்த ஊர் செல்வதற்காக புடன்பகுடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ரயில்வே ஊழியர்கள் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் டிக்கெட் கவுண்டருக்கு அருகிலேயே புடன்பகுடி சோகமாக நின்று […]
