கென்யா நாட்டில் கட்டிட இடிபாடுகளிலிருந்து 6 உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கென்யா நாட்டில் உள்ள முராங் கவுண்டி என்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக 4 அடுக்கு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தையடுத்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இதுவரை 6 உடல்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
