கோவை சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடைபெற்றது தொடர்பான வீடியோ வெளியானது. இந்த நிலையில் அதிகாரிகள் அப்பள்ளியை மூடி சீல் வைத்துள்ளனர். கோவை சவுனால் அப்பகுதியில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்ப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 1,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்த பள்ளியில் நுழைவுத்தேர்வு நடைபெறுவதாக காணொளிகள் வெளியானது. […]
