திருச்சி அருகே மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் ஐம்பத்தி ஒரு சவரன் நகை ஐந்தரை லட்சம் பணம் உள்ளிட்டவற்றை திருடிய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாலாஜி நகரில் 7-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி வேலைக்கு […]
