சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் 5,650 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் உச்சிபுளி பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் தனிப்பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த […]
