மெக்சிகோ நாட்டில் புலம்பெயர்ந்த பணியாளர்கள் சென்ற கண்டெய்னர் லாரி விபத்துக்குள்ளாகி 54 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஒரு டிரக்கில் நூற்றுக்கும் அதிகமான அகதிகள் மத்திய அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளனர். அந்தக் கண்டெய்னர் லாரி மெக்சிகோவில் உள்ள சியாபாஸ் மாகாணத்தின் புறநகர் பகுதி நெடுஞ்சாலையில் பயணித்தபோது, அபாயகரமான வளைவில் திரும்பியிருக்கிறது. அந்த சமயத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில், சுமார் 54 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கு அதிகமானோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. […]
