சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 53 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 53 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சிவகங்கை, காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். […]
