மியான்மர் ராணுவத்தினர் , இதுவரையில் சுமார் 510 போராட்டக்காரர்களை சுட்டுகொன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக ஆட்சியை கலைத்து, ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினர். இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராணுவப் படை வீரர்கள் ,பொது மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ,பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் போராட்டக்காரர்களை பகலில் தாக்கியும், இரவு நேரங்களில் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து ,கைது நடவடிக்கைகளிலும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். […]
