கலிங்கப்பட்டியில் பெய்த கனமழையால் 500 வாழைகள் அடியோடு சாய்ந்துள்ளது. தமிழகத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் அருகில் கலிங்கப்பட்டி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த கனமழை பெய்தது. இந்த கனமழையால் கலிங்கப்பட்டியில் வசித்து வந்த விவசாயி நிறைபாண்டி என்பவர் பயிரிட்டு இருந்த 500க்கும் அதிகமான வாழைகள் அடியோடு சாய்ந்தது. இதனால் விவசாயி மிகுந்த கவலை அடைந்தார். […]
