தமிழகத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில் வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் தடுப்பூசிகள் அதிக அளவு போடப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 31ம் தேதிக்கு முன்பாக […]
