தவறான விளம்பரங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய நுகர்வோர் நலத்துறையின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை கருத்தில் கொண்டு தவறான விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்யும் விதமாக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் அச்சு போன்ற அனைத்து துறைகளிலும் வெளியிடப்படும் தவறான விளம்பரங்களுக்கு ரூபாய் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். […]
