ஈரான் நாட்டில் ஹிஜாபை எதிர்த்து போராடும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 50 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாடு இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வருகிறது. எனவே, அங்கு ஒன்பது வயதுக்கு அதிகமான சிறுமிகளும் பெண்களும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இதற்கிடையில், குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சஹீஸ் என்னும் நகரத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளம்பெண்ணான மாஷா அமினி, ஹிஜாபை சரியாக அணியாத காரணத்தால் காவல்துறையினரால் கடுமையாக […]
