தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கைலாசபுரம் பண்ணை வீட்டில் ஓ. பன்னீர் செல்வத்தை புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இவர்கள் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் அதிமுக கட்சியில் இணைந்துள்ளனர். புதிதாக கட்சியில் இணைந்த 50 பேரும் ஓபிஎஸ்-க்கு மலர் கொத்துக்கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு கோவை செல்வராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுகவில் தொண்டர்கள் நம் பக்கம் தான் இன்றளவும் இருக்கிறார்கள். […]
