பிரபல உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வடபழனியில் யா முகைதீன் என்ற பிரபல உணவகம் இருக்கிறது. இங்கு கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்துகிறார்கள் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி யா முகைதீன் கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில் 50 கிலோ கெட்டுப்போன இறைச்சி, மீன், இறால் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கடைக்கு அதிகாரிகள் 5,000 […]
