பலத்த மழையின் காரணமாக வாழை மரங்கள் மற்றும் கரும்பு பயிர்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள கல்வராயன்மலையை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதைப்போன்று மூங்கில்துறைப்பட்டு பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் கரும்பு பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த மன […]
