தமிழகத்தில் பட்டியலினத்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும் அவர்களுடைய முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் தமிழகத்தில் ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நல வாரியம் என்ற […]
