பள்ளத்தில் தவறி விழுந்த காட்டெருமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மலைப்பகுதியிலிருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து காட்டெருமை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு கால்நடை உதவி இயக்குனரான டாக்டர் ஹக்கீம் தலைமையிலான மருத்துவ குழுவினர் வந்து காட்டெருமையை பரிசோதித்து பார்த்துள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினர் கூறும்போது […]
