25 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் காவல்துறையினரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் […]
