வாலிபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவேந்திரன் வீட்டின் மாடியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவேந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி இது தொடர்பாக காவல்துறை உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. […]
