உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் அதிகரித்து வருவதால் அந்நாட்டிலிருந்து இதுவரை 5 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகள், ரஷ்யப் படைகளால் தாக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் ரஷ்ய அதிபர் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைக்குமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. […]
