காங்கிரஸ் கட்சி 5 லட்சம் பேருக்கு வெப்வாரியர்ஸ் என்ற பெயர் மூலமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சமீபகாலமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் அடுத்த சில மாதங்களில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதே சமயம் தொலைநோக்கு பார்வையுடன் கட்சியை வளர்க்க வேண்டியிருக்கிறது. கட்சிக்கு சரியான தலைமை, மாநிலங்களில் தலைமை, […]
