மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் உள்ள கல்வா சாய்பாபா நகரில் பைப்லைன் பகுதியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 மாத மகன் ஸ்ரீகாந்த் என்பவர் உள்ளார். வீட்டில் ஐந்து மாத குழந்தை தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சாந்தி கடைக்கு சென்று வீட்டிற்கு வந்து பார்த்த போது நாங்கள் ஸ்ரீகாந்த் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு அக்கம் பக்கத்தில் குழந்தையை தேடி பார்த்த போது எங்கும் […]
