மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதிகள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அதிரப்பட்டி கிராமத்தில் நாகராஜ்-முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாகராஜ் அவரது மனைவி, மகன் கிருஷ்ணமூர்த்தி, மருமகள் தேன்மொழி ஆகியோர் சொந்த வேலை காரணமாக 2 மோட்டார் சைக்கிள்களில் விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ராமகவுண்டம்பட்டி அருகே சென்ற போது திருச்சி நோக்கி வேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள்கள் மீது […]
