உருமாற்றம் அடைந்த கொரோன வைரஸுக்கான 7 அறிகுறிகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கொரோனாவிலிருந்து இருந்து இன்னும் உலக நாடுகள் மீண்டு வராத நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை அனைத்து நாடுகளும் தடை செய்தது. உருமாறிய இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸை அடுத்து புதிய வகை வைரஸ் அசுரவேகத்தில் பரவி வருவதால் மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர். […]
