தனியார் நிறுவனத்தின் ஊழியரிடம் வழிப்பறி செய்துவிட்டு தப்பி சென்ற 5 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரகடத்தில் தனியார் நிறுவனத்தில் பாலாஜி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு 2 மணி அளவில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி விலை மதிப்பில்லா செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து பாலாஜி பெரிய காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் […]
