5 இருசக்கர வாகனங்களை திருடிய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் காளப்புதூர் பகுதியில் வசிக்கும் தமிழ்செல்வன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பால்வண்டி டிரைவராக வேலை […]
