கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதல்-மந்திரி அறிவித்துள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும், பாதிப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் மிகத்தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த […]
