சபரிமலையில் வருகின்ற 20ஆம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் கொரோன அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி வாரத்தின் ஐந்து நாட்களில் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் […]
