நீண்ட இழுத்தடிப்புக்குப் பின் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஒரு வழியாக 4ஜி எனப்படும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை சேவை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுவந்தது. தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடோஃபோன் நிறுவனங்களின் 4ஜி சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதித்தபோதும் அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இந்த அனுமதி வழங்கப்படாமலே இருந்துவந்தது. மேலும், பிஸ்என்எல் – எம்டிஎன்எல் […]
