இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலையால் காயமடைந்தவர்கள் தற்போது உயிரிழந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4-ஆம் தேதி இந்தோனேசியாவில் 3,676 மீட்டர் உயரமுடைய செமேரு எரிமலையிலிருந்து புகை வெளிவந்துள்ளது. அதன் பிறகு திடீரென வெடித்த அந்த எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் புகையானது வான்வரை பரவி காற்றில் கலந்துள்ளது. இந்த சம்பவத்தில் எரிமலையின் அருகிலிருந்த வீடுகளும், பாலம் ஒன்றும் பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பில் 41 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் […]
