பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெற்குணம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று தீபா இரவு அவருடைய பெரியம்மா ராஜலட்சுமியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோ இருக்கும் அறைக்கு […]
