உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதமான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 420 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். […]
