ஸ்பெயின் நாட்டில் 40 வருடங்களில் இல்லாத வகையில் வெப்பநிலையின் தாக்கம் உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் நாளை மறுநாள் முதல் கோடை காலம் ஆரம்பமாகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே வெப்ப அளவு வெகுவாக உயர்ந்துவிட்டது. கடந்த 40 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடத்தில் அந்நாட்டில் வெப்பநிலையின் தாக்கமானது கடுமையாக உயர்ந்து இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கடந்த மூன்று தினங்களாக அந்நாட்டின் சராசரி வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸ் இருக்கிறது. அதாவது, சகாரா பாலைவனம், வடக்கு […]
