அரியலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய 2 பேரை கைது செய்த போலீசார் 40 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள ராமதேவநல்லூரை சேர்ந்த கார்த்திக் என்பவரும், சுத்துக்குளம் பகுதியை சேர்ந்த விவேக் என்பவரும் இணைந்து சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் ராமதேவநல்லூர் ஓடையில் சாராய ஊறல் வைத்துள்ளதாக காவல் துறையினருக்கு தகவல கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட மீன்சுருட்டி போலீஸ் […]
