விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் தங்கசாமி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கையர்க்கரசி(64) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்கசாமி தனது மனைவி உறவினர்களான பூஜா(30), ரஞ்சனா(20) பேரன் பிரதுன் ஆகியோருடன் காரில் நவல்பட்டு பகுதியில் இருக்கும் மருமகன் லட்சுமணன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதேபோல் திருச்சி சுந்தரம் பிள்ளை தெருவில் வசிக்கும் ராமகிருஷ்ணன்(65) என்பவர் அவரது மனைவி பத்மாவுடன்(60) காரில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்த காரை மோகன்(45) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். […]
