வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு மரியநாதபுரம் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகேஷ் குமார் பாலகிருஷ்ணாபுரம் பகுதியிலுள்ள செட்டிகுளத்தில் மீன் பிடிக்கும் குத்தகையை தனது தந்தையின் பெயரில் எடுத்துள்ளார். இரவு நேரத்தில் குளத்து பகுதியில் ராகேஷ் குமார் தனது நண்பர்களுடன் காவல் பணியில் ஈடுபடுவது […]
