போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றத்திற்காக சிறுவன் உட்பட 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கரிமேடு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஆரப்பாளையம் பகுதியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் விக்னேஷ், ராகவேந்திரா, கோபிநாத் மற்றும் 17 […]
