சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நல்லதேவன்பட்டி கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு கருப்பன்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 576 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் உசிலம்பட்டி சந்தையில் கணேசன் என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை […]
