கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலூர்-கேரளா எல்லையான வழிகடவில் கேரளாவை சேர்ந்த மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இவர்கள் குறிப்பாக கூடலூரில் இருந்து வரும் வாகனங்களை மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சமயத்தில் கூடலூரில் இருந்து ஒரு ஜீப்பில் வந்த தம்பதியை நிறுத்தி உள்ளனர். அந்த ஜீப்பிற்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு […]
