உலகிலேயே குறைவாக இனி வாரத்தில் 4.5 நாட்கள்தான் வேலை நாட்களாக இருக்கும் என்று வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இறைவணக்க நாளான வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் அடுத்த இரண்டு நாட்கள் இனி வார விடுமுறை நாட்களாக இருக்கும். உற்பத்தி திறனை அதிகரித்தல், வேலை, வாழ்க்கை, சமநிலை பராமரித்தல் காரணங்களுக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்கள் என அனைத்துக்கும் இது பொருந்தும் எனவும் அந்த நாடு அறிவித்துள்ளது.
